எமது தந்தையாரின் மறைவின் பின்னர் அவர் தான் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பிய மலர் வெளியீடு என்ற பணியை தொடர வேண்டும். அவருடைய நல்ல சிந்தனைகள், செயல்கள், அவாக்கள் வெளி உலகிற்கு தெரிய வேண்டும். அதன் மூலம் அவருடைய ஆன்ம ஈடேற்றம் நிறைவுற வேண்டும் என்ற பெருவிருப்பின் காரணமாகவும். கடமையின் காரணமாகவும் அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர விரும்பி முயற்சித்தோம். அந்த வகையில் இம் முயற்சிக்கு உதவி புரிந்த கல்வியாளர்கள், சான்றோர்கள், எமது கிராமத்தவர்கள் ஆகியோருக்கு நன்றி கூறுவது எமது கடமையாகும். பலருடன் கலந்துரையாடி ஆக்கங்களைப் பெற்றுத் தந்ததோடு மிகச் சிறந்த ஆக்கமொன்றை வழங்கிய விரிவுரையாளர் கமலநாதன் அவர்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகள். அத்துடன் மலர் சிறப்புற வெளிவர ஆலோசனைகள் வழங்கிய ஓய்வு நிலை அதிபர் மே.வசந்தாதேவி அவர்களுக்கும் இப் பிரதேசத்தின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டி வரும் சமூக சேவையாளர் திரு.க.மயில்வாகனம் அவர்களுக்கும் நன்றிகள் பல. இம் மலரினை சிறப்பிக்கவும், மெருகூட்டவும் ஆக்கங்களையும், வாழ்த்துரைகளையும் வழங்கி எம்மை மகிழ்வித்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் எமது குடும்பம் சார்ந்த நன்றிகள்.
எமது தந்தையார் சிறிய சிறிய விடயங்களைக் தனது நாட்குறிப்பேடுகளில் பதிவிட்டு வைக்கும் பழக்கம் கொண்டவர். அவர் பதிவிட்டு வைத்துள்ள விடயங்களையே மலராக வெளியீடு செய்துள்ளோம். இனி வருங்காலங்களில் எமது வரலாறுகள் எழுத்துருவில் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எமது ஆதங்கத்தையும் கூறி இம்மலரினை வெளியீடு செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயற்பட்டு வந்த திருவாளர் கதிரமலை சீனிவாசகம் அவர்கள் அமரத்துவம் அடைந்து விட்டார். அவருக்கும் எமது நன்றிகளைத் தெரி- வித்து நன்றியுரையை நிறைவு செய்கின்றோம்.
நன்றியுடன்
குடும்பத்தினர்
மறுமொழி இடவும்