நன்றி:wikipedia.org

இலங்கையில் உள்ள மிகப்பெரிய தாவரவியற் பூங்கா பேராதனை தாவரவியற் பூங்கா ஆகும். இது இலங்கையின் சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதுடன் நிறைந்த கல்விப் பெறுமானமும் கொண்டது. ஏராளமான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும் இருந்து வருகின்றது.

மத்திய மாகாணத்தில் இருக்கும் கண்டி நகரத்திற்கு மேற்குத் திசை நோக்கிச் செல்கையில் 5.5 கி.மி தூரத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 127 ஏக்கராக இருப்பதுடன் விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த தேசியப் பூங்காப் பண்ணைப் பிரிவினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

12ம் நூற்றாண்டிலிருந்தே இந்தப் பகுதியின் வரலாறு தொடங்குகின்றது. 1371இல் 3ம் பராக்கிரமபாகு மன்னன் இவ்விடத்தைதனது இருப்பிடமாகக் கொண்டான். 1747 1780 வரை கண்டியை ஆண்ட இராஜசிங்கனும் இவ்விடத்தில் தற்காலிகமாக தங்கியிருந்ததாக அறியப்படுகின்றது. 1815 ஆண்டில் பிரித்தானியர்கள் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர் அப்பகுதி அவர்கள் கைக்கு மாறியது.

நன்றி:wikipedia.org

இத் தாவரவியற் பூங்கவில் பார்ப்போர் மனதைக் கவரும் வகையில் பல வகையான தாவரங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள ஓர்க்கீட் பூங்க மிகவும் புகழ்பெற்றதொன்றாகக் காணப்படுகின்றது. இங்குள்ள வாசனைத் திரவியத் தோட்டம், கற்றாழையகம், அந்துரியம் வளர்ப்பகம் என்பன இங்குள்ள சிறப்பம்சங்களாக உள்ளன. அத்துடன் பூங்காவிற்கு மகாவலி ஆற்றைக் கடந்த செல்லும் தொங்கு பாலமும் காணப்படுகின்றது. பூங்காவின் ஓரத்தை ஒட்டிச் செல்லும் மகாவலி ஆற்றின் கரையில் பூங்காவின் எல்லை போல மூங்கில் மரங்கள் காணப்படுகின்றன. இலங்கைத் தீவின் வடிவில் அமைக்கப்பட்ட ஒரு குளமும் பூங்கவில் அமைந்துள்ளது. இயற்கையை இரசிப்பதற்கு சிறந்த ஓர் இடமாக இப் பூங்கா காணப்படுகின்றது.

செல்வி நிறைஞ்சன் தட்சாயிணி
தரம் 11