
இலங்கையில் உள்ள சிகிரியா என்ற சிங்க மலையும் அதில் அமைந்துள்ள அரண்மனயும் உலக பாரம்பரிய சின்னமாக ஐநாவின் அமைப்பான யுனெஸ்கோவினால் 1982ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பெருமைக்கு உரியது. உலகளாவிய ரீதியில் தேடிப்பார்க்கும் ஓர் படைப்பாக இந்த அநுராதபுரத்தில் காணப்படும் சிகிரிய ஓவியங்கள் விளங்குகின்றது. சிகிரியா. இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளையிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையானது கி.பி 477-495 வரையிலான காலத்தில் காசியப்பன் என்பவரால் ஓர் குன்றை மையமாகக் கொண்டு கட்டப்பட்டது ஆகும். இதன் சுவரில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த ஓவியங்களில் 21 பெண்களின் தோற்றம் உடைகள் ஆபரணம் மற்றும் அவர்களின் கலாசாரம் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் ஓர் ஓவியமாகக் காணப்படுகின்றது.
குறிப்பாக சிகிரியா சுவர் ஓவியங்கள் இயற்கையிலிருந்து பெறப்பட்டவர்ணங்களை உபயோகித்து 21ற்கு மேற்பட்ட பெண் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இப்பெண்களின் கைகளில் மலர்களை ஏந்தியவாறும், தட்டுக்களில் மலர்களை ஏந்தியவாறும் காணப்படுவதோடு இப்பெண் உருவங்கள் வசிகரமான தோற்றத்துடனும் கவிநயத்துடனும் அகன்ற ஒடுங்கிய நீண்ட கழுத்து, நீண்ட மெல்லிய ஓவியங்கள். நீண்ட கண்கள், 2 மார்பகங்கள் கொண்ட வசீகரமாக தன்மையுடனும் கீழைத்தேய பெண்களை நினைவூட்டும் ஓர் சிறந்த கலைப்படைப்பாகவும் காணப்படுகின்றது. இந்தியாவிலுள்ள அஜந்தா குகைகள் போன்ற இடங்களில் வரையப்பட்ட ஓவியங்களுட ஒத்ததன்மையுடையனவாக இவ் ஓவியங்கள் விளங்குகின்றன.
குறிப்பாக சிகிரியா ஓவியங்களில் காணப்படும் பெண்கள் அங்கு வாழ்ந்த பெண்களாகவும் காசியப்பனின் மனைவி மற்றும் தோழிகள் எனவும் இயங்கயிலிருந்து பெறப்பட்ட வர்ணங்களை உபயோகித்து முக்கியமாக் கொண்டும் முப்பரிமாணத் தன்மையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளமை ஓர் சிறப்பான அம்சமாகும்.
மற்றும் இந்த சிகிரியா குன்றின் உயரம் ஏறத்தாள 200மீ ஆகும். இந்தப் பாறையின் தோற்றம் சமபாதியாக உயரத்தில் ஒரு மடிப்பாக இயற்கையாக அமைந்துள்ளது. அதனால் ஒரு சிங்கம் படுத்திருப்பது போன்ற தோற்றம் இருப்பதால் இந்த மலைக்கு சிங்கமலை என்ற பெயர் கிடைத்தது. மேலும் அழகிய தோட்டம், நீர்பாசன அமைப்பு. ஒரே மாதிரியான சீரான குளியல் குளங்கள் போன்றன சீகிரியாவை மேலும் வியக்க வைக்கும் ஒரு விசேட அம்சமாக விளங்குகின்றது. மற்றும் சீகிரியா வாசலில் சிங்கத்தின் கால் அச்சு ஒன்று வரையப்பட்டதுடன் சுற்றுலாப்பயணிகளின் மனதைக் கவரும் ஓர் படைப்பாகவும் காணப்படுகின்றது.
சிங்கள மொழியிலும் இலங்கை தேசியக் கொடியிலும் சிங்கம் தொடர்புடையது. இந்த மலை சிங்கத்தை அந்த நாட்டோடு தொடர்புடையதாகவும் முன்பே ஒரு சமயோசித புத்தியுடன் அமைக்கப்பட்ட படைப்பாகக் காணப்படுகின்றது. அதனால் அந்த சிங்கம் ஒரு இனத்தை பிரதிபலிப்பது அல்ல. இலங்கையில் வாழும் சகல இனத்துக்கும் உரியதாக விளங்குகின்றது.
இவ்வாறு முப்பரிமாண தன்மையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளமை ஓர் சிறப்பாக அம்சமாகவே விளங்குகின்றது.
செல்வி ஆனந்தராசா டிலற்ஷிகா
தரம் 11